×

பாஜக மையக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது.அதே நேரத்தில் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜக மையக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் நடந்து வருகிறது. பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டம் நிறைவு பெற்றது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள், கூட்டணி தொடர்பாக பாஜக மையக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

The post பாஜக மையக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP Central Committee ,Bon ,Radhakrishnan ,
× RELATED திருவாரூர் பிரபல நகைக்கடையில் கவரிங்...